எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பின்னடைவு பணிகளை நிரப்ப கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு நெடுஞ்சாலை துறை எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் எஸ்.ஆசைத்தம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: திதிராவிடர்களுக்கான 1,234 பணியிடங்கள், பழங்குடியினருக்கான 614 பணியிடங்கள் என மொத்தம் 1,848 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கண்டறியப்பட்டது. குறிப்பாக நெடுஞ்சாலை துறையில் மட்டும் 166 பணியிடங்கள் காலியாக இருந்தது. இதுவரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காலி பணியிடங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிரப்பும்படி தமிழக அரசு, நெடுஞ்சாலைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு  உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: