மெரினாவில் கடை வைக்க 14,841 பேர் விண்ணப்பம்: பரிசீலனை செய்யும் பணி இன்று தொடக்கம்

சென்னை:மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றம் மெரினா கடற்கரையில் 900 கடைகள் அமைக்க அனுமதி அளித்தது. இதில் 60 சதவீதம் மெரினா கடற்கரையில் தற்போதுள்ள தெரு விற்பனையாளர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கும், புதிய விண்ணப்பதாரர்களுக்கு 40 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அறிவித்தது. மேலும், கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணியை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியும் நியமித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் கடை வைப்பதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி கடந்த 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. இதன்படி ‘ஏ’ பிரிவுக்கு 1361 பேர், ‘பி’ பிரிவுக்கு 16,760 பேர் என்று மொத்தம் 18,121 பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். இதில் ‘ஏ’ பிரிவுக்கு 1345 பேர், ‘பி’ பிரிவுக்கு 14,841 பேர் என்று மொத்தம் 16,186 பேர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். விண்ணப்ப பரிசீலனை இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related Stories: