லண்டனில் இருந்து வந்த மேலும் 3 பேருக்கு கொரோனா

சென்னை: லண்டனில் இருந்து வந்தவர்களில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 64,283 சோதனைகள் செய்யப்பட்டதில், 1009 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் லண்டனில் இருந்து வந்தவர்கள் 3 பேர். இதைச் சேர்த்து லண்டனில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 93 ேபருக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

76 பேருக்கு தொற்று இல்லை. 5 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் 8,14,170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7,93,154 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 10 ேபர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,069 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி :

கோவிட் தொற்று ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து களத்தில் நின்று செயல்பட்டு வருகிறோம்.  புதிய வகை வைரசை கண்டு மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 1438 பேரில் 13 பேருக்கு பாசிடிவ் வந்துள்ளது. இவர்கள் தனியாக மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.  அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்பட்டு உள்ளனர். மாஸ்க் அணிந்துக்கொண்டுள்ள மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. மக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடித்து முகக் கவசங்கள் அணிந்தால் மீண்டும் ஊரடங்கு கொண்டுவர வேண்டிய  தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: