தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்கள் டிரான்ஸ்பர்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி மகேஸ்வரன், ஊட்டி நகர டிஎஸ்பியாகவும், அந்த பதவியில் இருந்த சரவணன், நீலகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி பிரகாஷ், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டிஎஸ்பியாகவும், அங்கிருந்த பீர் முகமது மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த மோகன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் டிஎஸ்பியாகவும், அங்கிருந்த ராமச்சந்திரன் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜேந்திரன் சேலம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாகவும், ஈரோடு சிறப்பு அதி விரைவுப்படை டிஎஸ்பி இளமுருகன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி தமிழ்வாணன் சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், அங்கிருந்த தேசிகன் சென்னை தலைமையிட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், அந்த பதவியில் இருந்த தங்கராஜ் கணேஷ் சிபிசிஐடி டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி டிஎஸ்பியாக இருந்த முருகேசன் சீருடைப்பணியாளர் தேர்வு குழும டிஎஸ்பியாகவும், சிபிசிஐடி காவல் ஆராய்ச்சி மைய டிஎஸ்பியாக இருந்த ஷர்மு மாநகர காவல் துறை குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், அங்கிருந்த சரஸ்வதி சிபிசிஐடி காவல் ஆராய்ச்சி மைய டிஎஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: