பழைய பதிவுகள் குறித்து உயரதிகாரி விசாரணை திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலத்தை பதிவு செய்ய தடை

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் விவகாரம் தொடர்பாக, பதிவுத்துறை உயரதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலம் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் தெருவில் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு வரை கோயிலின் பெயரில் இருந்த அந்த நிலம் 2009ல் தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோயில் செயல் அலுவலர் சக்திவேல், கடந்த 24ம் தேதி, இது கோயில் நிலம் என்று சம்பந்தப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைத்தார். இது தொடர்பாக சார்பதிவாளரிடமும் கடிதம் அளித்தார். இதனைத் தொடர்ந்து தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, கோயில் நிலம் குறித்த தகவல்கள் சென்னை தெற்கு ஏ.ஐ.ஜிக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அதன்மீது, ஏ.ஐ.ஜி உரிய  விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பார். மேலும் இந்த நிலத்தை பதிவு செய்வது தடை ெசய்யப்பட்டுள்ளது என தாம்பரம் சார்பதிவாளர் தெரிவித்தார்.

Related Stories: