மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தென்காசி: மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு கடந்த 15ஆம் தேதி முதல் குற்றாலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் கூடினர்.

இதேபோன்று உதகையிலும் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூங்காவில் நுழைவு கட்டணம் அதிகரித்திருப்பதற்கு சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் விடுமுறை என்பதால பல்வேறு சுற்றுலா மையங்களிலும் பொதுமக்கள் கூட்டத்தை அதிகம் காண முடிந்தது. இதனால் சுற்றுலா மையங்களை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அதிக அளவு மக்கள் கூடியதால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: