தமிழகத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவாக வாய்ப்பு மிக மிக குறைவு : நீர்நிலத்துறை நிபுணர்கள் தகவல்

சென்னை : அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவானால் தமிழகத்தில் ஆழிப்பேரலை ஏற்படும் என்று நீர்நிலத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாடு உட்பட தென் கிழக்கு ஆசியாவை சுனாமி தாக்கி 16 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், சுனாமி அலைகளின் கோரத்தாண்டவம் மக்கள் மனதில் விட்டு அகலவில்லை. பல லட்சம் மனித உயிர்களை பலி வாங்கிய சுனாமி, கடலோர கிராமங்களுக்குள்ளும் புகுந்ததால் விளை நிலங்கள் உவர்ப்பாக மாறின. இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமே இதற்கு காரணம் என்றாலும் இது போன்ற நிலநடுக்கம் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நிலநடுக்கப் பகுதியான அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனால் உருவாகும் சுனாமியால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் நிபுணர் நடராஜன் கூறியுள்ளார். சுனாமி ஆபத்தை முன்கூட்டியே காட்டும் எச்சரிக்கைக் கருவிகள் பொறுத்தப்பட்டு இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2004ம் ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் சுனாமி தாக்கி சென்னை முதல் குமரி கடலோரம் வரை பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆண்டு தாண்டவம் ஆகிய ஆழிப்பேரலையில், ஏராளமானோர் மடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: