செங்கல்பட்டில் ரயில் சேவை நிறுத்தம் பயணிகள் கடும் அவதி: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இன்று காலை ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ஏராளமான பயணிகள் அவதிப்பட்டனர். பின்னர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை  கடற்கரைக்கு வார நாட்களில் 26 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி சென்னையில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு செல்ல 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். எனினும், இன்று அரசு விடுமுறை என்பதால், ஞாயிற்றுகிழமையை போல் காலை 9.30 மணியளவில் மின்சார ரயில்  இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று வேலைக்கு செல்வதற்காக வந்த பயணிகள் ஆத்திரத்துடன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி மின்சார ரயில் இயங்காததால் பலர் ஏமாற்றத்துடன் வீடு  திரும்பினர். ஒருசிலர் காத்திருந்து, காலை 9.30 மணியளவில் சென்னை நோக்கி புறநகர் மின்சார ரயிலில் ஏறி வேலைக்கு கிளம்பி சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி பரபரப்பு நிலவியது.

Related Stories: