ஜிப்சம் மூலம் ரூ.1.33 கோடி வருவாய்: ரயில்வே தகவல்

சென்னை: சென்னை துறைமுகத்திலிருந்து 28,377 டன் ஜிப்சம், ஏற்றிச் செல்லப்பட்டு சுமார் ரூ. 1.33 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ஜிப்சம் சரக்குகளை சென்னை துறைமுகத்திலிருந்து கர்நாடக மாநிலம், பிடதியிலுள்ள செயின்ட் கோபைன் நிறுவனத்திற்கு கடந்த 3ம் தேதி முதல் சரக்கு ரயிலை இயக்கியது. இதுவரை 10 சரக்கு ரயில்களில் 28,377 டன் ஜிப்சம் ஏற்றிச்சென்றது. இந்த புதிய சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ1.33 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வணிக மேம்பாட்டு பிரிவு குழுவின் தளரா முயற்சிகள், இதுபோன்ற புதுவகை சரக்கு இயக்கத்தை உறுதி செய்துள்ளன. மேலும் தொழில் நிறுவனங்களுடான நல்லுறவு, நல்நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் புதுவகை சரக்கு போக்குவரத்து சாத்தியமாக்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: