சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சிறையில் உள்ள பேரறிவாளனை சந்திக்க தாய்க்கு அனுமதி

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலம் சரியில்லாமல் சமீபத்தில் பரோலில் வெளியில் வந்த பேரறிவாளன், கடந்த 7ம் தேதி சிறைக்கு சென்றார். இந்நிலையில் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கும், உறவினர்களுக்கும் அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், பேரறிவாளனின் உறவினர்கள், நண்பர்களை காணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

வக்கீல்களை பொறுத்தவரை அவர்கள் பெயர் பட்டியலை சிறை நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். யாரையெல்லாம் அனுமதிப்பது என்பது குறித்து சிறை சூப்பிரண்டு முடிவு செய்வார். பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளை பொறுத்தவரை அவர் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வருகிற ஜனவரி 19ம் தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அவருக்கு அனுமதி தரவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Related Stories: