நிலவிடுப்பு வழக்கு எடியூரப்பா கோரிக்கை தள்ளுபடி

பெங்களூரு: கர்நாடகாவில் 2008 - 2011ல் முதல்வராக பாஜ.வை சேர்ந்த எடியூரப்பா இருந்தபோது, தொழில்பேட்டைக்கு ஒதுக்கீடு செய்த  நிலத்தில் 8.41 ஏக்கர் அரசு நிலம் விடுவிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு பல கோடி  ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாசுதேவ ரெட்டி என்பவர் லோக்ஆயுக்தா நீதிமன்றத்தில் 2013ல் புகார் கொடுத்தார். இதன் மீது விசாரணை நடத்திய  நீதிமன்றம், எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 2015ம் ஆண்டு  லோக்ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனிடையில், தனக்கு எதிராக  லோக்ஆயுக்தாவில் பதிவு செய்துள்ள நில விடுவிப்பு வழக்கை ரத்து செய்யும்படி  கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா வழக்கு தொடர்ந்தார். அது  நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா முன்னிலையில் நேற்று   விசாரணைக்கு வந்தது.  அப்போது, ‘இப்புகாரில் மனுதாரருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை  ரத்து செய்யக்கோரும் மனுவை தள்ளுபடி செய்கிறேன்,’ என நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம், முதல்வர் எடியூரப்பா சட்ட சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை   ஏற்பட்டுள்ளது.

Related Stories: