திருப்போரூர் நில விவகாரம் தாசில்தார் பரிந்துரைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மார்ச் மாதம் ஒரு நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், சம்மந்தப்பட்ட குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கோயில் நிலத்தை நான் ஆக்கிரமிக்கவுள்ளதாக அவதூறு பரப்பி நிலத்தை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கொடுத்த புகாரை விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு, திருப்போரூர் தாசில்தார் பரிந்துரைத்துள்ளார். எனவே, எனது புகாரை தாசில்தாரே விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும். பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்த தாசில்தாரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு செங்கல்பட்டு டிஆர்ஓ, ஆர்டிஓ  தாசில்தார், எம்.எல்.ஏ இதயவர்மன் அவரது தந்தை லட்சுமிபதி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: