புரெவி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில் தமிழகம் வருகை: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னை: புரெவி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில் தமிழகம் வரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நிவர் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திய மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அது தொடர்பான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து உடனடியாக அடுத்த ஓரிரு நாட்களில் புரெவி புயல் தாக்கியதையடுத்து வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் முந்தைய புயலால் பாதிக்கப்பட்ட நிவாரணம் கிடைக்கும் முன்னே டெல்டா மாவட்டங்களில் நெல், கரும்பு மற்றும் விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் மத்திய குழு ஆய்வு செய்யும். அதில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஒரு ஆய்வு அறிக்கை தயார் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நிவர் புயலுக்கு மத்திய தரப்பில் இருந்து வழங்கப்படவுள்ள நிவாரண நிதியை போலவே புரெவி புயலுக்கும் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

Related Stories: