உச்சநீதிமன்ற உத்தரவின்படி சட்டவிரோதம்: தொழிற்சங்கத்தினர் போல வக்கீல்கள் போராடக்கூடாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில்  விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.8ல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. அப்போது, வக்கீல் சிவக்குமார், நாகர்கோவில் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதனால், அவர் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் ெசய்யப்பட்டார்.  இதை எதிர்த்து வக்கீல் சிவக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: வக்கீல்கள் தொழிற்சங்கத்தினரைப் ேபால போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் தொழில் மிகவும் புனிதமானது. ஆனால், தற்போது வக்கீல்கள் நீதிமன்ற பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். சில சங்கங்கள் அரசியல் மற்றும் ஜாதி ரீதியான காரணங்களுக்காக கூட ேபாராடுகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் போராட்டம் சட்ட விரோதமானது என உத்தரவிட்டனர்.

Related Stories: