அமித்ஷா நேற்று பேசியவை பொய்க்குப்பைகள்; மத்திய அரசின் தகவல்களின் படி சிறுகுறு தொழில்கள் துறையில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது: அமித்ஷாவுக்கு மம்தா பதிலடி

கொல்கத்தா: பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி; அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியதுதான் பாஜக என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. இந்த முறை மேற்குவங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது: பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி; அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியதுதான் பாஜக. சிஏஏ மூலம் மக்களின் தலைவிதியை பாஜகவினால் தீர்மானிக்க முடியாது. சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கும் தொடர்ந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அமித் ஷா நேற்று பொய்களின் குப்பைகளை பேசியுள்ளார். எங்கள் மாநிலம் தொழிலில் பூஜ்ஜியம் என்று அவர் கூறினார்.

ஆனால் நாங்கள் எம்.எஸ்.எம்.இ துறையில் முதலிடத்தில் இருக்கிறோம். எங்களால் கிராமப்புற சாலைகளை உருவாக்க முடியாது என்று அவர் கூறினார், ஆனால் நாங்கள் அதில் முதலிடத்தில் இருக்கிறோம். இது இந்திய அரசின் தகவல் என கூறினார். மேலும் நாங்கள் குடியுரிமை திருத்த சட்டம் , என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கும் எதிரானவர்கள். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டிச.29-ம் தேதி மேற்குவங்கம் பிர்பூரில் பேரணி நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: