கூவம், அடையாற்றை தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் ஓரத்தில் வசிக்கும் 21,000 குடும்பங்கள் அகற்றம்

* ரூ.5,000 கோடியில் திட்டம்

* அரசாணை வெளியீடு

சென்னை: கூவம், அடையாற்றை தொடர்ந்து பக்கிங்காம் கல்வாய் ஓரத்தில் வசிக்கும் 21 ஆயிரம் குடும்பங்களை அகற்றி மறு குடியமர்வு செய்ய முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்காம் கல்வாய்கள் தூர்வாரி சீரமைக்கும் பணியை தமிழக அரசு செய்துவருகிறது. இதன்படி அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணி காரணமாக அடையாறு, கூவம், பக்கிங்காம் கல்வாய் ஓரத்தில் வசிப்பவர்களை அகற்றிவிட்டு அவர்களை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது. நகரத்துக்குள்ளேயே வீடு தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் பொதுமக்களின் போராட்டங்களுக்கு இடையில், தமிழக அரசு சத்திய வாணிமுத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதி குடிசைகளை அகற்றியது.  இந்நிலையில் பங்கிங்காம் கால்வாய் அருகே உள்ள 21 ஆயிரம் குடும்பங்கள் அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் பிறபிக்கப்பட்டுள்ளது.

பங்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் அருகில் உள்ள கால்வாய்களை மறுசீரமைப்பு செய்ய ரூ.5,439 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பங்கிங்காம் கால்வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 21,334 குடும்பங்களை மறு குடியமைர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை குடிசை மாற்று வாரியம் செய்யும். இதற்காக ரூ.3,339 கோடி செலவாகும். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக ரூ.1,281 கோடிக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கால்வாய்களை மேம்படுத்த ரூ.542 கோடி, திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.131 கோடி செலவு செய்யப்படவுள்ளது.

17 ஆயிரம் குடும்பங்கள் மறு அமர்வு

அடையாறு, கூவம், சென்னை  மாநகராட்சியின் கல்வாய்கள் ஓரம் தங்கி இருந்த 26,837 குடும்பங்களில் 17,768 குடும்பங்கள் அகற்றப்பட்டது. 9069 குடும்பங்கள் அகற்றபட  வேண்டியுள்ளது.

Related Stories: