உண்மையான ரிப்ளக்டர் ஸ்டிக்கர் எது?: போக்குவரத்து துறை விளக்கம்

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட பிரதிபலிப்பு பட்டை உற்பத்தியாளர் யார் என்பதை போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் தகுதிச் சான்றை புதுப்பிக்க பிரதிபலிப்பு பட்டை உள்ளிட்டவைகளின் பொருத்த சான்றிதழின் உண்மைத் தன்மையை வாகன் மூலமாகவோ அல்லது உற்பத்தியாளரின் இணையதளம் வாயிலாகவோ உறுதி செய்வதற்கு பதிலாக பிரதிபலிப்பு பட்டைகளின் உண்மை தன்மை அங்கீகார நகலுடன் உறுதி செய்யப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர் தங்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவரின் பெயரில் முறையாக ஒட்டப்பட்ட முத்திரை மற்றும் கையெழுத்துடன் ஒப்புதல் சான்றிதழின் நகலைக் கொண்டு வருவதன் மூலம், அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்யலாம் என முன்னதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில், அங்கீகரிப்பட்ட உற்பத்தியாளர் யார் என்றால், மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை முகமைகளின் மூலம் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள்தான்.

அதேநேரம், ஒப்புச் சான்று என்பதென்னவென்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் சார்பில் வழங்கப்படும் நிறுவனத்தின் ரசீது என்பதே ஆகும். இது தவிர்த்து, தகுதிச் சான்றைப் புதுப்பிப்பதற்கான தற்போதைய நடை முறைகள் அப்படியே தொடரும். இதன்படி, அனைத்து மண்டல மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர் யார் என்றால், மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை முகமைகளின் மூலம் அங்கீகாரம் பெற்றவர்கள்தான்.

Related Stories: