நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு குடியரசுத்தலைவர் உத்தரவு: அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு குடியரசுத்தலைவர் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார். நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று நடத்திய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்ததாக அங்கிருந்து வரும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் தலைமை மற்றும் அமைச்சர்களுடன் நேற்று நடத்திய தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பின்னர் நேபாள அமைச்சரவையின் அவசர கூட்டத்தை சர்மா ஒலி நடத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரச்சாந்தாவுடன் அதிகாரத்திற்கான மோதலுக்கு மத்தியில் ஒலியின் இந்த நடவடிக்கை வந்துள்ளது நேபாள அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது இந்திய எதிர்ப்புக் கொள்கையால், தொடர்ந்து உட்கட்சி மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் சூழலில் முன்னதாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க சர்மா ஒலி திட்டமிட்டு இந்த நடவடிக்கியை எடுத்துள்ளார் என நேபாள அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனையடுத்து,  நேபாள பிரதமர் சர்மா ஒலி தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: