மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகளை ஒதுக்க முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெரினா கடற்கரையில் உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரம் செய்வதற்கான கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க டிசம்பர் 26ம் தேதி கடைசி நாளாகும். சிறு வியாபாரம் செய்வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி வழங்க வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகள் சட்டப்பூர்வ உரிமைகளின்படி சென்னை மாநகராட்சி வழங்க உரிய உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.

Related Stories: