ஆர்டிஐ கட்டணத்தை பதிவு செய்ய வேண்டும்: அனைத்து துறை செயலாளர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் துறை ரீதியான  தகவல்களையும் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டு பெறலாம். இதற்காக , ஒவ்வொரு துறை சார்பிலும் பதிலளிக்கும் ஒவ்வொரு நகல்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை சம்பந்தப்பட்டத்துறையின்  மூலம் கணக்கில் நேரில் செலுத்தப்பட்டு வந்தது.  தற்போது வரை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கட்டணங்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் செலுத்தப்படும் கட்டணங்கள் செலுத்த புதிதாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும்,  இனி வருங்காலங்களில் அதன் கட்டண விவரங்களை ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவு செய்ய வேண்டும் என்று பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை சுவர்ணா அனைத்து துறை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: