வேலூர் மாநகராட்சியில் ரூ.10,000 வங்கி கடன் வழங்க 5,375 தெருவோர வியாபாரிகள் கணக்கெடுப்பு: 10ம் தேதிக்குள் கணினியில் பதிவேற்ற கமிஷனர் உத்தரவு

வேலூர்: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சியில் கமிஷனர் சங்கரன்  உத்தரவின்பேரில், மண்டலம் 1ல் 625 பேர், மண்டலம் 2ல் 1,000 பேர், மண்டலம் 3ல் 625 பேர், மண்டலம் 4ல் 1,000 பேர் உட்பட மொத்தம் 5,375 தெருவோர வியாபாரிகளை கணக்கெடுத்து 10 நாட்களுக்குள்  கணினியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பேரில் 4 மண்டலங்களிலும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு ₹10,000 வங்கி கடன் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் உள்ள லாங்கு பஜார்  பகுதியில் தெருவோர வியாபாரிகள் எத்தனை பேர் உள்ளனர் என்று சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கணக்கெடுப்பு நடத்தினார்.

அப்போது வியாபாரம் செய்யும் இடத்தை போட்டோ எடுத்தனர். பின்னர் வியாபாரிகளின் ஆதார், குடும்ப அட்டை, வங்கி விவரங்கள், ஆதாருடன் இணைத்த செல்போன் எண் போன்ற விவரங்களையும், அதன்  நகல்களையும் பெற்றுக்கொண்டனர். மாநகராட்சி முழுவதும் தெருவோர வியாபாரிகள் வங்கி கடன் வழங்க கணக்கெடுப்பு நடத்தி முடித்து கணினியில் பதிவேற்ற அந்தந்த உதவி கமிஷனர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: