தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.சத்யநாராயணன் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்யநாராயணன் 2009ல் நிரந்த நீதிபதியாக பதவியேற்றார். கிரிமினல், சிவில், அரசியலமைப்பு உள்ளிட்ட அனைத்து சட்டப் பிரிவுகளிலும்  நிபுணத்துவம் பெற்றவர் நீதிபதி சத்யநாராயணன். இவர் 2021 ஜூன் மாதம் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் இவரை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பதவியில் 4 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை  இவர் பணியாற்றுவார்.டிடிவிக்கு ஆதரவாக பேரவையில் செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியபோது 3வது நீதிபதியாக வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தவர் நீதிபதி  சத்யநாராயணன்.

Related Stories: