விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தடையை மீறி உண்ணாவிரதம்: வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெறுகிறது

சென்னை: வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் தடையை மீறி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். டெல்லியை முற்றுகையிட்டு, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளுக்கும், அவர்கள் மத்திய பாஜக அரசின் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும்- அதன் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து தலைவர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்துக்கு முறைப்படி போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. இதன்படி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் போலீஸ் தடையை மீறி இன்று திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திமுக தலைவர் அனைத்து கூட்டணி தலைவர்களும் இன்று வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுடவுள்ளனர்.

Related Stories: