பண்ணைப்புரத்தில் காட்டு யானைகளால் காலியாகும் விவசாயம்

தேவாரம்: தேவாரம் அருகே வனப்பகுதியில், சுமார் 3 கி.மீ கேரள மலைக்கிராமங்கள் உள்ளன. அடர்ந்த காடுகளில் மலைமாடுகள், மான், யானைகள், குரங்குகள் வாழ்கின்றன. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பெரும்பாலானோருக்கு இப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் கம்பு, சோளம், மக்காச்சோளம், பயிடப்பட்டுள்ளது. கடந்த 1 மாதமாகவே பண்ணைப்புரம் மலைப்பகுதியில் இரண்டு காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இவை அடர்ந்த காடுகளில் இருந்து மக்கள் நடமாடும் இடங்களுக்கு வந்து மிரட்டுகின்றன. பண்ணைப்புரம் சுருளி மனைவி, தங்கமணி என்பவரது சோளத்தோட்டம், மலையடிவாரத்தை ஒட்டி சங்கப்பன்குளம் பகுதியில் உள்ளது.

இந்த தோட்டத்தை காட்டுயானைகள் நாசப்படுத்தி சென்று விட்டது. இரவு முழுவதும் தோட்டத்தில் தங்கி பயிர்களை 2 காட்டுயானைகள்  நாசப்படுத்திவிட்டு சென்றதால் பண்ணைப்புரம் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மானாவாரி நிலங்களுக்கு உடனடியாக நஷ்டஈடு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: