குழந்தைகளின் வாசிப்பு திறனை வளர்க்க கதைகளை படிப்பதற்கான ஆன்லைன் போர்ட்டல்: சிசோடியா துவக்கி வைத்தார்

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசு கல்வித்துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது. ஏற்கனவே மகிழ்ச்சி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்த துறையின் அமைச்சர் சிசோடியா, புதிய ஆன்லைன் போர்ட்டல் ஒன்றை துவக்கி வைத்தார். இதுபற்றி சிசோடியா கூறியதாவது: சிறு வயதிலிருந்தே குழந்தைகள் கதைகளைப் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பது மிகவும் முக்கியம். கதைகள் குழந்தைகளின் மனநிலையை வளர்க்கவும், அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதனால்தான் டெல்லி அரசுப் பள்ளிகளில் ‘சுனாட்டி’ மற்றும் ‘மிஷன் புனியாட்’ போன்ற திட்டங்கள் மூலம் குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்த கதைகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த முயற்சிகளில் கதை நிறுவனம் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. இந்த புதிய இ-போர்ட்டல் தளம் ஏன் துவக்கப்படுகிறது எனில், இது இந்தியாவில் எளிதாக கிடைத்துவிடாது என்பதால் தான். எனினும், இந்த இணையத்தை உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனைவரும் அணுகக்கூடியதாக இருக்கும். இந்த கோவிட் காலத்தில் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள் தங்களை அடையாளம் காண்பதற்கும், வேடிக்கையான மற்றும் அர்த்தமுள்ள கதைகளை அணுகுவதற்கான ஒருங்கிணைப்பு தளமாக இந்த இணையதளம் விளக்கும். டெல்லி அரசு மகிழ்ச்சி பாடத்திட்டம் மற்றும் தொழில்முனைவோர் பாடத்திட்டங்களில் கதைசொல்லலைப் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் நாங்கள் குழந்தைகளுக்கு நேர்மறையான செய்திகளை தெரிவிக்க முடிகிறது மேலும் இந்த கதைகள் மூலம் நாட்டின் மற்றும் உலகின் சவால்களை அவர்களுக்கு புரிய வைக்க முடியும். இவ்வாறு சிசோடியா கூறினார்.

Related Stories: