சுக்குநாறி புற்களுக்கு கடும் கிராக்கி: குமரியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணிகள் தீவிரம்

தக்கலை: உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இயேசுநாதரின் பிறப்பை கொண்டாடும் இந்த பண்டிகை குமரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் தொடங்கியதுமே களை கட்டிவிடுகிறது. இதன் முக்கிய அம்சமாக குடில்கள் இடம் பெறுகின்றன. இயேசுநாதர் மாட்டு தொழுவத்தில் பிறந்தார் என்ற கருத்தினை எடுத்துக்காட்டும் வகையில் குடில்கள் அமைத்து அதனை காட்சியாக அமைகின்றனர். சமீப காலமாக வீடுகள் மட்டுமின்றி தேவாலயங்கள், பொது இடங்களிலும் பிரம்மாண்டமான குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் தேவாலய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு குடில்களை அமைத்து வருகின்றனர். குடில்கள் அமைப்பதற்கு முக்கிய பொருளாக சுக்குநாறிப் புல் பயன்படுத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இந்த வகை புற்கள் தாராளமாக கிடைக்கிறது. வழக்கமாக இந்த புற்கள் வேளிமலை, அதனை சார்ந்த மலைப் பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் கும்லாக சென்று பைக், ஆட்டோ, மினி டெம்போக்களில் வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் விற்பனைக்காகவும் புற்கள் குவிக்கப்பட்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் குறைவான நாளே இருப்பதால் குடில்களை அமைக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவது அதிகரித்து வருகிறது.

Related Stories: