மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் ஆற்றில் நுரை; அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை: சுற்றுசூழல்துறை அமைச்சரின் பேச்சுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர்: மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் ஆற்றில் நுரை ஏற்படுகிறது என்று கூறிய சுற்றுசூழல்துறை அமைச்சர் தற்போது கரூர் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை என்று கூறியிருப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரில் சாயக்கழிவுகளால் ஆற்றில் நுரை வெள்ளமாக சென்ற போது மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நுரை ஏற்பட்டுள்ளதாக சுற்றுசூழல்துறை அமைச்சர் தெரிவித்தார். தற்போது கரூர் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை என்று கூறியுள்ளார்.

இவர்களின் பொறுப்பற்ற பேச்சுகளால் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மை மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உண்மைக்கு புறம்பாக அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.

Related Stories: