9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதன்படி 2018ம் ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 933 பெண் குழந்தைகள் என்ற வகையில் குழந்தைகள் பாலின விகிதம் உள்ளது. இந்தியாவில் பிறப்பு இறப்பு தொடர்பான தகவலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய பிறப்பு இறப்பு தலைமை பதிவாளர் வெளியிட்டு வருகிறார். இதன்படி 2018ம் ஆண்டு பதிவான பிறப்பு இறப்பு தொடர்பான தகவல் தொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த அறிக்கையின்படி தமிழகத்தில் 9 லட்சத்து 15 ஆயிரத்து 406 பிறப்புகள் பதிவாகி உள்ளன. இதில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 204. பெண்கள் குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 202. இதன்படி 2018ம் ஆண்டு பிறப்பு பதிவின்படி தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 933 என்ற நிலையில் உள்ளது. இதன்படி தமிழகத்தில் 9 ஆண்களுக்கு பிறகு தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 2005-07ம் ஆண்டில் பாலின விகிதம் 944 என்ற நிலையில் இருந்தது. 2006-08ம் ஆண்டில் இந்த விகிதம் 936 ஆக குறைந்தது. இதற்கு அடுத்த ஆண்டான 2007-09ல் பிறப்பு பாலின விகிதம் 930 கீழ் குறைந்து 929 என்ற நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு பிறப்பு பாலின விகிதம் 933 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

நகரங்களில் பெண் குழந்தை அதிகரிப்பு:

கிராமப்புறங்களில் 1 லட்சத்து 5  ஆயிரத்து 877 ஆண் குழந்தைகள், 95 ஆயிரத்து 356 பெண் குழந்தைகள் என்று  மொத்தம் இரண்டு லட்சத்து ஆயிரத்து 233 பிறப்பு பதிவாகி உள்ளது.  நகர்ப்புறங்களில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 327 ஆண் குழந்தைகள், 3 லட்சத்து  45 ஆயிரத்து 846 பெண் குழந்தைகள் என்று மொத்தம் 7 லட்சத்து 14 ஆயிரத்து 173  பிறப்பு பதிவாகி உள்ளது.

Related Stories: