பொங்கல் பண்டிகை முடியும் வரை அமைச்சர் பதவி கேட்டு வரவேண்டாம்: முதல்வர் எடியூரப்பா காட்டம்

பெங்களூரு: பொங்கல் பண்டிகை முடியும் வரை அமைச்சர் பதவி கோரிக்கையுடன் வர வேண்டாம் என்று மேலவை உறுப்பினர் எம்.டி.பி.நாகராஜியிடம் முதல்வர் எடியூரப்பா காட்டமாக தெரிவித்தார். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் காரணமாக முதல்வர் எடியூரப்பா காவேரி இல்லத்தில், அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தார். கூட்டம் முடிந்த பின்னர் மேலவை உறுப்பினர் எம்.டி.பி. நாகராஜ் முதல்வரை சந்தித்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எங்களுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அப்போது நிதானத்தை இழந்த முதல்வர் பொங்கல் பண்டிகை முடியும் வரை அமைச்சர் பதவி கோரிக்கை எடுத்துக்கொண்டு வர வேண்டாம் என்று தெரிவித்து தனது அலுவலகத்துக்குள் சென்றார்.

இதை சற்றும் எதிர்பாராத எம்.டி.பி.நாகராஜ் அங்கிருந்து வெளியே வந்தார். பின்னர் அமைச்சர் ஆர். அசோக் உட்பட சில அமைச்சர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்தார். முதல்வரின் இந்த முடிவால் சட்டப்பேரவை கூட்டத்துக்கு பின் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆர்.சங்கர், முனிரத்னம், எம்.டி.பி.நாகராஜ் உட்பட பலர் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: