ஆனைமலை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நாற்று நடவுக்காக விதை நெல் விதைப்பு பணி தீவிரம்

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதி, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் நாற்று நடவுக்காக விதை நெல் விதைப்பு பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், வேட்டைகாரன்புதூர், மயிலாடுதுறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக, இரண்டு போக  நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதில், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் முதல்போக நெல் சாகுபடிக்கு நாற்று நடவு செய்யப்பட்டது. அவை கடந்த அக்டோபர் மாதம் அறுவடை செய்யப்பட்டன.

இதைதொடர்ந்து, இரண்டாம் போக  நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் களம் இறங்கியுள்ளனர். அண்மையில் பருவமழை ஒருபக்கம் இருந்தாலும்,  பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஆனைமலை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்இதற்காக தங்கள் விளை நிலங்களை தயார் செய்து, உழுது சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில், உழவு பணி மேற்கொண்டு சீர்ப்படுத்தப்பட்ட விளைநிலங்களில் முதல்போக சாகுபடிக்கு,

நெல் நாற்று நடவுக்காக நெல் விதைப்பில் விவசாயிகள் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் காரப்பட்டி எனும் பகுதியில், விவசாய கூலித்தொழிலாளர்களே விதை நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். இன்னும் இரண்டு வாரத்தில், நெல் நாற்று நடவு மேற்கொள்ளப்படும். அதன்பின் மூன்று மாதத்திற்கு பிறகு நெல் அறுவடை பணி நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: