சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்: நெமிலி அருகே பரபரப்பு

நெமிலி: நெமிலி ஒன்றிய பள்ளூர்  ஊராட்சி ஆலப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேற்றில் இறங்கி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெமிலி ஒன்றியம் பள்ளூர் ஊராட்சியில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி மண் சாலையாக உள்ளதால், தார் சாலை அமைக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த மாதம் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் கன மழையால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறி சேறும் சகதியும் சூழ்ந்துள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் செற்றில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மேலும், மழைநீர் கொசுக்கள் சூழ்ந்து உள்ளதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: