மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ நிகழ்ச்சி ஆன்லைனில் ஒளிபரப்பு: கோயில் நிர்வாகம் தகவல்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பிரதோஷ நிகழ்ச்சியை இன்று நேரலையில் காணலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தொண்டை மண்டலத்தில் அமைய பெற்ற சிவ திருத்தலங்களில் முதன்மையானதும், ஞானசம்பந்தரால் அங்கம்பூம்பாவையை தேவார பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், பார்வதி தேவியார் மயிலுருவில் சாப விமோச்சனம் பெற்று உமா மகேஸ்வரன் உமா தேவியை திருமணம் செய்து கொண்ட திருத்தலமாகவும் விளங்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணியளவில் நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி //www.youtube.com/c/MYLAPOREKAPALEES WARARTEMPLE என்ற யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உள் புறப்பாடும் பக்தர்களின் கோரிக்கையின் படி  ஒளிபரப்பப்படவுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: