தமிழகம்-பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே பொருளாதார உறவினை பலப்படுத்திடவும், பிரான்ஸ் நிறுவனங்களுக்காக தமிழ்நாட்டை ஒரு முதலீட்டு தளமாக தேர்ந்தெடுத்து, அதன்மூலம் விநியோக அமைப்புகளை பலப்படுத்திடவும் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனத்திற்கும், இந்திய பிரான்ஸ் வர்த்தக சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், இந்திய பிரான்ஸ் வர்த்தக சபை சார்பில் அதன் துணை தலைவர் ஜோயல் வெரானி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இமானுவேல் லினைன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரான்ஸ் நாட்டு தூதரகத்தின் தூதர் லிசி டால்பாட் பரே, வர்த்தக ஆணையர் மற்றும் தெற்காசியாவிற்கான பிரான்ஸ் நாட்டின் வணிக தலைவர் எரிக் பஜ்ஜோல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: