10 மாதங்கள் கடந்தும் வீரியம் குறையாத கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.73 கோடியை கடந்தது; 15.41 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.73 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.92 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்கா  -  1,51,59,529,

இந்தியா        -  96,76,801,

பிரேசில்        -  66,03,540,

ரஷியா          -  24,60,770

பிரான்ஸ்     -  22,92,497

இத்தாலி       - 17,28,878

இங்கிலாந்து  - 17,23,242

ஸ்பெயின்    -16,99,145

அர்ஜென்டினா - 14,63,110

கொலம்பியா - 13,71,103

ஜெர்மனி     - 11,84,845

மெக்சிகோ  - 11,68,395

போலந்து   - 10,63,449

ஈரான்           - 10,40,547

பெரு           - 9,73,912

துருக்கி      - 8,28,295

தென்னாப்பிரிக்கா - 8,14,565

Related Stories: