கடலூரில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: அமைச்சர் சண்முகத்துக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: புரெவி புயலின் தாக்கத்தினால் கடலூர் மாவட்டத்தில் அதிக பாதிப்பு இருப்பதால் அமைச்சர் சி.வி.சண்முகம் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புரெவி புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 முதல் 5.12.2020 வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரை கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்த நிலையில்,

கடலூர் மாவட்டத்தில் கன மழையின் காரணமாக அதிக பாதிப்பு இருப்பதால் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் மேற்கூறிய இரு அமைச்சர்களுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: