விவசாயிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? புதிய வேளாண் சட்டங்கள் சாதகமா பாதகமா?

மத்திய அரசு புதிதாக சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் என்ற இந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மொத்தமாக வஞ்சிக்கிறது; அவர்களின் வாழ்வாதாரத்தையே குலைக்கிறது என குற்றம்சாட்டப்படுகிறது. மாறாக இச் சட்டங்கள் உண்மையில் விவசாயிகள் நலனுக்கும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்குமானது. எதிர்க்கட்சிகள் பொய் கூறுகின்றன என மத்திய அரசு வாதம் வைக்கிறது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 10 நாளுக்கும் மேலாக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

மத்திய அரசு விவசாயிகள் பிரதிநிதிகளுடன் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமாகி வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பதால் மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. இதுதவிர இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ குரல் எழுப்பியுள்ளார். இப்போது, விவசாயிகள் போராட்டம் பற்றி இந்திய அரசிடம் குரல் எழுப்ப வேண்டும் என 36 பிரிட்டன் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனம் பெற்று வருகிறது. புதிய வேளாண் சட்டங்கள் சாதகமானதா, பாதகம் பொருந்தியதா என்பது குறித்து நான்கு பேர் இப் பகுதியில் அலசுகின்றனர்.

Related Stories: