×

முக்கிய பிரமுகர்கள் உதவியுடன் ₹100 கோடிக்கு மேல் கடத்திய சொப்னா: சுங்க இலாகா விசாரணையில் அம்பலம்

திருவனந்தபுரம்: முக்கிய  பிரமுகர்களின் உதவியோடு சொப்னா கும்பல் துபாய்க்கு 100 கோடிக்கு மேல்  பணம் கடத்தியது சுங்க இலாகா விசாரணையில் தெரியவந்துள்ளது. துபாயில்  இருந்து அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து  சுங்க இலாகா நடத்திவரும் விசாரணையில் நாளுக்குநாள் பல்வேறு திடுக்கிடும்  தகவல்கள் கிடைத்து வருகின்றன. சொப்னா தலைமையிலான கும்பல் இந்தியாவில் முறைகேடாக  சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளனர். இதை  ரிவர்ஸ் ஹவாலா என கூறுகின்றனர். லைப் மிஷன் திட்டத்தின் மூலம்  கிடைத்த ₹1.90 கோடி பணத்தை டாலர்களாக மாற்றி துபாய்க்கு கடத்தியதை ஏற்கனவே  சுங்க இலாகா கண்டுபிடித்தது. இதுபோல  சொப்னா மற்றும் சரித்குமார் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரக தூதரக துணைத்தூதர்  மற்றும் சிவசங்கரை பயன்படுத்தி வௌிநாட்டுக்கு டாலர்களை கடத்தி உள்ளனர்.

இதில் 3 கேரள  அமைச்சர்கள், சுங்க இலாகா உயரதிகாரி, போலீஸ் உயரதிகாரி, வட கேரளாவில் உள்ள  மத அமைப்பின் தலைவர், ஒரு முக்கிய நடிகர் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் தங்களுக்கு முறைகேடாக  கிடைத்த பணத்ைத வளைகுடா நாடுகளுக்கு கடத்தி உள்ளனர். இவர்கள்  இதுவரை 100 கோடிக்கும் மேல் பணத்தை கடத்தி இருக்கலாம் என தெரிகிறது.  இவர்களது நடவடிக்கைகளை மிக தீவிரமாக சுங்க இலாகா கவனித்து வருகிறது. யார்  யார் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற விபரங்களை, தற்ேபாது சுங்க இலாகாவின்  காவலில் உள்ள சொப்னாவும், சரித்குமாரும் தெரிவித்துள்ளனர். மேலும்  வௌிநாட்டுக்கு பணம் கடத்திய வழக்கில் இவர்கள் இருவரும் அப்ரூவராக  மாறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், ேம0லும் பல அதிர்ச்சி தகவல்கள்  கிடைக்கலாம் என கருதப்படுகிறது.

முக்கிய பிரமுகர்கள் கிலி
தங்கம் கடத்தல் வழக்கில்  சில முக்கிய விபரங்களை தெரிவிக்க விரும்புவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொப்னாவும், சரித்குமாரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவர்கள் ரகசிய வாக்குமூலம் அளிக்கும்போது பல முக்கிய பிரமுகர்களின் தொடர்பு  குறித்து தெரிவிப்பார்கள் என தெரிகிறது. இதனால், இவர்களுடன் தொடர்பில் இருந்த பல முக்கிய பிரமுகர்கள் கிலி அடைந்துள்ளனர்.
Tags : Sopna ,Customs department probe , Sopna smuggled over க்கு 100 crore with the help of key figures: Customs department probe exposed
× RELATED ரூ1 லட்சம் பணம் கொடுத்து பட்டம்...