×

கடந்த ஆண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சொப்னா சுரேஷ்-க்கு ஜாமீன் அளித்தது கேரள நீதிமன்றம்

கேரளா: தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சுரேஷ்-க்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அமீரக தூதகரத்தின் பெயரில் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சொப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை வழக்குகள் பதிவு செய்தன.கேரள அரசியலிலும் இந்த வழக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தின. சொப்னா சுரேஷ்-க்கு சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் பதிவான வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்தது. ஆனால் தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் எர்ணாகுளம் காக்கநாடு மத்திய சிறையிலேயே சொப்னா சுரேஷ் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் 25 லட்சம் ரூபாய்க்கு ஜாமீன் பத்திரம் இதே தொகைக்கு 2 பேர் உத்திரவாதம் என்ற நிபந்தனைகளோடு கடந்த 2-ம் தேதி கேரள நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இந்த நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து எர்ணாகுளம் காக்கநாடு மத்திய சிறையிலிருந்து சொப்னா சுரேஷ் விடுவிக்கப்பட்டார்.                      …

The post கடந்த ஆண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சொப்னா சுரேஷ்-க்கு ஜாமீன் அளித்தது கேரள நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Kerala court ,Sopna Suresh ,Kerala ,Sobna Suresh ,Dinakaran ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...