ஆர்டிக் பனிப்பகுதி மிகச்சிறிய பறவை குமரிக்கு வருகை

நாகர்கோவில்: ஆர்டிக் பகுதிகளில் வாழ்கின்ற பறவைகள் இந்தியா போன்ற சீரான தட்பவெட்ப நாடுகளுக்கு வருகின்றன. இவ்வாறு இடம்பெயர்ந்து வருகின்ற பறவைகளின் பட்டியலில் கொசு உள்ளான் என்ற மிகச்சிறிய பறவையும் உள்ளது. இப்பறவை குமரி மாவட்டத்தின் மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதிக்கு இவ்வாண்டு வந்துள்ளது. இங்கு வரும்போது இப்பறவையின் எடை 16 கிராம் மட்டுமே உள்ளது. தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி போகின்றபோது 26 கிராம் இருக்கும் என பறவை விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் கிரெப் தனது ஆய்வின் வாயிலாக தெரிவித்துள்ளார். மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதியில் பறவைகளுக்கு தேவையான மீன், நண்டு, புழுக்கள், நீர் தாவரங்கள் கிடைப்பதால் இப்பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. கொசு உள்ளான் பறவைகள் சுமார் 12 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து குமரி மாவட்டத்திற்கு வருகின்றனவனத்துறை போதிய கவனம் செலுத்தி அவற்றை வேட்டையாடுதலை தடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பறவை ஆர்வலர் டேவிட்சன் தெரிவித்துள்ளார்

Related Stories: