கட்சி தொடங்கிய பின் கூட்டணி குறித்து முடிவு: ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும்: தமிழருவி மணியன் பேட்டி.!!!

சென்னை: ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பரில் 31-ல் தேதி அறிவிப்பு. போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெறுவது நிச்சயம். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்றி, ஜாதி மதச்சார்பற்ற ஆண்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும் என டிவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன், நடிகர் ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் ஆகியோர் சென்னையில் உள்ள ரஜினி இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழருவி மணியன், டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி குறித்து அறிவிப்பார். கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

 முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் எதுவும் பேசவில்லை. அடிப்படை செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தோம். ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு எனது காந்திய மக்கள் இயக்கத்தை அதனுடன் இணைப்பேன். மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பார் ரஜினிகாந்த் என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>