உளுந்தாண்டார்கோயில் குளம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட உளுந்தாண்டார்கோயில் பகுதியில் உள்ள கோயில் குளம் சீரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் துவங்கியது. குளத்தை சுத்தப்படுத்தி, சுற்றி கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீர் குளத்தில் தேங்கி நின்று வருகிறது. இதனால் கட்டுமான பணிகள் நடைபெற வில்லை.

மழை இல்லாத நேரத்தில் வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு உள்ளிட்ட இதர பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் தூர்வாரும் பணி இதே போல் மழை வருவதற்கு முன்னர் துவங்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. இதே போல் இந்த குளம் சீரமைப்பு பணியும் பாதியில் தடை ஏற்படாமல் இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: