கேந்திரியா வித்தியாலய பள்ளிகளில் தமிழை பயிற்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி கடிதம்

சென்னை: கேந்திரியா வித்தியாலய பள்ளிகளில் தமிழை பயிற்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். கேந்திரியா வித்தியாலய பள்ளிகளில் இந்தி - ஆங்கிலம் மட்டுமே பயிற்சி மொழியாகவும், படமொழியாகவும் உள்ளது. மேலும் கேந்திரிய, சிபிஎஸ்இ பள்ளிகளை மட்டும் மத்திய அரசு முன்னிலைபடுத்தி வருகிறது. இது இந்திய அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவுள்ளது. எனவே செம்மொழியான தமிழை இந்தி, ஆங்கிலத்துக்கு இணையாக பயிற்சி மொழியாக அறிவிக்க கோரி கடிதம் எழுத்தியுள்ளார்.

Related Stories: