சார்பதிவாளர்கள் 11 பேர் பணியிட மாற்றம்: பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 11 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குன்னத்தூர் சார்பதிவாளர் வெங்கடேஸ்வரன் கோபி 1ம் எண் இணை சார்பதிவாளர், ராயக்கோட்டை சார்பதிவாளர் சண்முகவேல் தர்மபுரி அசல் பதிவு பிரிவு கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி அசல்பதிவு பிரிவு கண்காணிப்பாளர்  முத்துக்குமார் நாமக்கல் சார்பதிவாளர் (நிர்வாகம்), வாசுதேவநல்லூர் சார்பதிவாளர் மாரியப்பன் செங்கோட்டை சார்பதிவாளர், திருப்பூர் சார்பதிவாளர் (நிர்வாகம்) ஈஸ்வரி குன்னத்தூர் சார்பதிவாளர், ஊத்துக்குளி சார்பதிவாளர் செல்வராஜ் சங்ககிரி சார்பதிவாளர், தாராபுரம் சார்பதிவாளர் இளவரசன் ஊத்துக்குளி சார்பதிவாளர்,

ஆம்பூர் சார்பதிவாளர் ஜெயக்குமார் கிருஷ்ணகிரி சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்), உத்தமபாளையம் சார்பதிவாளர் கார்த்திகேயன் திருமங்கலம் சார்பதிவாளர், திருமங்கலம் சார்பதிவாளர் மகேந்திரன் மதுரை (தெற்கு) அசல் பதிவு பிரிவு கண்காணிப்பாளர், சிறுப்பாக்கம் சார்பதிவாளர் கோவிந்தராஜன் வேப்பூர் சார்பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களை உடனடியாக விடுவித்து புதிய இடத்தில் தவறாது உடனே பணியில் சேர அறிவுரை வழங்குமாறு மாவட்ட பதிவாளர்கள் ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: