கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் அரசு அலுவலக வளாகத்தில்நேரடி விற்பனைக்கு தடை: நிர்வாகம் உத்தரவு

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், அனைத்து மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வளாகங்களில் நேரடி வளாக விற்பனையில் மாற்றங்கள் கொண்டு வர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, அனைத்து விற்பனை நிலையங்களில் வளாக விற்பனை டிசம்பர் 1 (நேற்று) முதல் தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே வளாக விற்பனையை மேற்கொண்டு வரும் விற்பனை நிலையங்கள் வரும் 5ம் தேதிக்குள் விற்பனையை முடிக்க  மண்டல அலுவலகங்கள் அறிவுறுத்த வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கான தவணை விற்பனை (கடன் விற்பனை) தற்போதைய நடைமுறையை பின்பற்றி தரலாம். அதே போன்று ஒப்பந்த அடிப்படையிலான தவணை விற்பனை,  துறையில் இருந்து மறு உத்தரவு வரும் வரை தொடரும்.  இது டிசம்பர் 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Related Stories: