பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு: 443 பேர் கலந்துகொண்டனர்

சென்னை: பொதுப்பிரிவினருக்கு நேற்று நடந்த மருத்துவ கலந்தாய்வில் நேற்று 443 பேர் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர்.  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ் இடங்களை நிரப்புவதற்கான பொதுப்பிரிவினருக்கான 2ம் நாள்  கலந்தாய்வில், தரவரிசை எண் 752 முதல் 1203 வரை உள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மொத்தம் 452 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 443 பேர் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். 9 பேர் வராத நிலையில் அரசு கல்லூரிகளில் 406  இடங்களும் தனியார் சுயநிதிகல்லூரிகளில் 23  இடங்களும் என மொத்தம் 429 எம்.பி.பி.எஸ் இடங்கள் நேற்றைய கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. 9 பேர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் சுயநிதிகல்லூரிகளில் ஒரு பி.டி.எஸ் இடங்கள் கூட நேற்றைய கலந்தாய்வில் நிரப்பபடவில்லை.

Related Stories: