எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு பழநி மலைக்கோயிலில் வின்ச் மீண்டும் இயக்கம்

பழநி: கொரோனா ஊரடங்கால், 160 நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் பழநி கோயிலில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. செப். 1 முதல் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வசதியாக வின்ச்சை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் 50 சதவீத பக்தர்களுடன் வின்ச் இயக்கப்பட்டது. வின்ச் நிலையத்தில் அர்ச்சகர்கள் பூஜை செய்தனர். அதன்பின், முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.  மீண்டும் வின்ச் இயக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: