சென்னை போயஸ் இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை: அரசியல் நிலைபாடு குறித்து இருக்கலாம் என தகவல்

சென்னை: சென்னை போயஸ் இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசியல் நிலைபாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் 2 மணி நேரம் மேலாக ஆலோசனை நடத்தினார். அரசியல் பிரவேசம் குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார். ரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் எனவும் கூறியிருந்தார்.

அரசியல் கட்சி குறித்து தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். எனவே எந்த முடிவெடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்தனர் எனவும் நேற்று கூறியிருந்தார். ஆலோசிக்கப்பட்டதாகவும், கட்சி தொடங்கினால் முதல்வர் வேட்பாளராக ரஜினி தான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது.

தொடர்ந்து பேசிய அவர், நான் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுத்துவதாக மாவட்ட செயலாளர்கள், என்னிடம் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்ட நான் எனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டேன். அரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றார். இதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் அசோக், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் ஆகவே மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க வேண்டியுள்ளதாக ரஜினி தெரிவித்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: