×

தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரன் ரூ.440 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ.1832 வீழ்ச்சி; நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.440 குறைந்தது. ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1,832 குறைந்துள்ளது. கடந்த 23ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 6 நாட்களில் சவரன் ரூ.1,392 அளவுக்கு குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. விலை குறைவால் நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், கடந்த ஒரு வாரமாக நகைக்கடைகளில் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.

அதனால், அன்றைய தினம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று காலை மீண்டும் தொடங்கியது.அதில் நகை வாங்குவோருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தங்கம் விலை கிடுகிடுவென சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.4,524க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.36,192க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிந்தது.

அதாவது கடந்த சனிக்கிழமையை விட கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.4,519க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.36,152க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு தங்கம் விலை ரூ.1,832 சரிந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை படிப்படியாக குறைந்து சவரன் ரூ.36 ஆயிரத்துக்குள் நெருங்கி வருகிறது. இது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தங்கம் விலை குறைய தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Jewelry buyers , Gold prices fall sharply to Rs 440 in a single day: Rs 1,832 a week; Jewelry buyers delight
× RELATED தங்கத்தில் விலை இன்று குறைந்ததால் நகை...