3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: வீட்டு வசதித்துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக இருந்த டி.கார்த்திகேயன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி வரலாற்று ஆய்வு மற்றும் காப்பகத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் வணிகத் துறை ஆணையராக இருந்த எஸ்.ஜெ.சிரு சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: