×

திமுக நிர்வாகி இல்ல திருமண விழா: டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சி காட்டுக்கொள்ளைமேடு, திமுகவின் செயல்வீரர் ரா.பாபு  - பா.கௌரி ஆகியோரது மகன் பா.ஜெகதிஷ் மற்றும் கோ.பாபு - பா.வரலட்சுமி ஆகியோரது மகள் பா.ஹேமலதா(எ)ஹரிதா ஆகியோரது திருமண விழா நேற்று சாமிரெட்டி கண்டிகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஷ்வரி, மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், முன்னாள் ஒன்றிய பொருப்பாளர் பி.வெங்கடாசலபதி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கர், அதிமுக ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், திமுக ஒன்றிய குழு துணை தலைவி கு.மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், பேருர் இலக்கிய அணி அமைப்பாளர் நந்தகோபால், தலைமை பேச்சாளர் தமிழ் சாதிக், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சேகர், திமுக நிர்வாகிகள் எம். எல். ரவி, தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ராகவரெட்டிமேடு ரமேஷ், உதயகுமார் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இறுதியாக எளாவூர் ஊராட்சி செயலாளர்  தியாகராஜன் நன்றியுரை கூறினார்.Tags : Executive ,DMK ,House Wedding Ceremony: Participation of DJ Govindarajan , DMK Executive House Wedding Ceremony: Participation of DJ Govindarajan
× RELATED திமுக நிர்வாகி காரை வழிமறித்து அதிமுகவினர் ரகளை